Our Feeds


Sunday, February 11, 2024

News Editor

ஒற்றுமை, நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவொன்றை உருவாக்கும் கலந்துரையாடல்


 உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவை நிறுவுவதற்கான உத்தேச சட்டம் தொடர்பில் ஆலோசிப்பதற்காக, உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தினால் (ISTRM) ஏற்பாடு செய்யப்பட்ட சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடனான கலந்துரையாடல் அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.


பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் மற்றும் சட்டம் தொடர்பான பேராசிரியை சாவித்ரி குணசேகர ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல், உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் கொள்கைப் பிரதானி கலாநிதி சி.வை.தங்கராஜாவின் உதவியுடன் அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசங்க குணவம்சவினால் நெறிப்படுத்தப்பட்டது. இதில் அரச அதிகாரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சட்டம் மற்றும் நிலைமாறுகால நீதித்துறையில் உள்ள அறிஞர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதில் பெரும் பங்காற்றக்கூடிய உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் (CTUR) வரைவின் பல்வேறு அம்சங்களைப் பற்றி கலந்துரையாடுவதும் நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பில் ஆராய்வதும் இந்த கலந்துரையாடலின் பிரதான நோக்கமாக இருந்தது. 


உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகம் (ISTRM) உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான இடைக்கால செயலகம் (CTUR)பாதிக்கப்பட்ட குழுக்கள், அழுத்தத்திற்கு முகங்கொடுத்த தரப்பினர்கள், மதத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் போன்ற தரப்பினர்களுக்கான ஆலோசனை நிகழ்ச்சிகள் தற்போது நடத்தப்பட்டு வருவதாக இங்கு குறிப்பிடப்பட்டது.

 


ஏனைய அதிகார எல்லைகளில் உண்மை, நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்புக்கான பொறிமுறைகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை தயாரித்தல் முன்மொழியப்பட்ட சட்டத்தின் கீழ் ஆணையாளர்களின் பரிசீலனைக்கான வழிகாட்டுதல்கள் தயாரித்தல் மற்றும் முனைப்புடன் பணியாற்றுவது தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது.


உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகம் (ISTRM) 04 பிரிவுகளைக் கொண்டுள்ளதோடு சட்ட விவகாரங்கள், கொள்கை மேம்பாடு, மக்கள் தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற நபர்களைக் கொண்டுள்ளது.



பாதிக்கப்பட்டவர்களின் குரலுக்கு செவிசாய்ப்பதை  உறுதிசெய்து பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் உட்பட, நிலைமாறுகால நீதியின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய வலுவான கருத்துப்பரிமாறலுக்கு இந்த கலந்துரையாடல் வாய்ப்பளித்தது.


தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கியமான தகவல்களைக் கையாளுதல், முறையான பதிவு முகாமைத்துவத்திற்கான தேசிய சுவடிகள் திணைக்களத்துடன் ஒத்துழைப்புடன் செயற்படல் மற்றும் நிலைமாறுகால நீதிச் செயல்பாட்டில் புலம்பெயர் தமிழர்களின் ஈடுபாடு போன்ற பிரச்சினைகள் குறித்தும் பங்கேற்பாளர்கள் கருத்து தெரிவித்தனர்.


நிலைமாறுகால நீதிச் செயன்முறைக்கான நம்பிக்கையையும் சட்டப்பூர்வமான தன்மையையும் கட்டியெழுப்புவதற்காக பல்வேறு பங்குதாரர்களிடமிருந்து கருத்துக்களை சேகரிக்க பரந்த மற்றும் வெளிப்படையான ஆலோசனை செயல்முறையை நடத்துவதன் முக்கியத்துவமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.



உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (CTUR) தொடர்பான சட்டமூம் தொடர்பான சம்பந்தர்பட்ட தரப்பினர்களின் மறுஆய்வு மற்றும் ஆலோசனைக்கு சமர்ப்பிக்க முடியும் எனவும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் பல்வேறு நலன்கள் மற்றும் முயற்சிகள் உள்வாங்கப்படுவதை உறுதிசெய்ய இந்த அணுகுமுறை பின்பற்றப்படும் என்றும் பங்கேற்பாளர்களுக்கு சுட்டிக்காட்டப்பட்டது. 


நல்லிணக்கத்தை நோக்கிய இலங்கையின் பயணத்தில் அனைத்து பிரஜைகளுக்கும் மிகவும் நியாயமானதும் விரிவானதுமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக, இவ்வாறான கருத்தாடல்கள் முக்கியமான படியாக அமையும் என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது.



ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »