உலக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களோடு தனது கட்சியும் மாறியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார்.
தேசிய மக்கள் சக்தியின் இந்திய விஜயம் தொடர்பான உண்மைகளை தெளிவுபடுத்துவதற்காக இன்று (11) அவரது கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டதாகவும், 10 நாள் விஜயம் 05 நாட்களாக குறைக்கப்பட்டதாகவும் விஜித ஹேரத் தெரிவித்தார்.