Our Feeds


Wednesday, February 28, 2024

SHAHNI RAMEES

பிரேத பரிசோதனை முடிந்தது.. இலங்கைக்கு கொண்டு வரப்படும் சாந்தனின் உடல்..!

 



ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான

சாந்தன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவர் காலமானார்.


இந்த நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனை முடிவடைந்து விட்டதாகவும் இன்று அவரது உடல் இலங்கைக்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த சாந்தன் சமீபத்தில் விடுதலை ஆனாலும் அவர் இலங்கை செல்ல அனுமதிக்கப்படவில்லை.


இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் முன்பு தான் அவர் இலங்கைக்கு செல்ல இருந்த நிலையில் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.


இந்த நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி அவர் இன்று காலை உயிரிழந்த நிலையில் அவருடைய உடல் பரிசோதனை முடிந்து விட்டதாகவும் எம்பார்மிங் செய்யப்பட்டு இலங்கையில் உள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவரது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்


கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட சாந்தன் தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி தான் மத்திய அரசு அதற்கு அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் தற்போது அவரது உடல் தான் இலங்கைக்கு செல்ல உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »