நாட்டின் பல பகுதிகளை பாதித்துள்ள அதிக வெப்பமான காலநிலை மே மாதம் வரை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் இன்றும் நாளையும் பாடசாலை மாணவர்களை வெளியில் தங்க வைப்பதை தவிர்க்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் இரத்மலானை பிரதேசங்களில் அதிகபட்ச வெப்பநிலை 36.8 செல்சியஸ் பாகையாக பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், குருநாகல், காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மனிதர்களால் உணரக்கூடிய வெப்பமான காலநிலை காணப்படுவதாக அவர்கள் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் வெப்பமான காலநிலையால் மக்களின் அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.