குறைந்தபட்ச வேக வரம்பை விட குறைவான வேகத்தில்
வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.இதுவரை நெடுஞ்சாலைகளில் நடக்கும் விபத்துகளுக்கு, நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட வேகம் குறைவாக இருப்பதே முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான அறிவுறுத்தல்கள் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.