இந்த நாட்டை பொறுப்பேற்றுக்கொள்ளும் அளவுக்கு சஜித் பிரேமதாச முற்றவில்லை என்றும் அது தொடர்பான அனுபவம் அவருக்கு குறைவு என்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த செவ்வியில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.
எனக்கு ஜெ.வீ பீ போன்ற ஒரு கட்சி எதிர்கட்சியாக வருவது பிடிக்கும். ஏன் என்றால் நாட்டில் ஊழல் நடக்காது. அவர்கள் கேள்வி கேட்பார்கள். ஆனால் தற்போதுள்ள சவால்களை வெற்றிகொண்டு ஜனாதிபதியாகும் அளவுக்கு அவர்கள் இன்னும் அனுபவம் பெறவில்லை.
அத்தோடு சஜித் பிரேமதாசவும் இன்னும் முற்றவில்லை. அதுதான் சஜித் பிரேமதாசவிடம் இருக்கின்ற பிரச்சினை. அவர் ஒரு நாளும் இரண்டாவதாக வந்ததில்லை. ஒரு நாட்டை வழிநடத்தும் முறை அவருக்கு தெரியாது.
ஊழல் ஒழித்தல், கள்வர்களை பிடித்தல் மூலம் மட்டும் இந்த நாட்டை முன்னேற்ற முடியும் என்று ஜெ.வீ.பீ நினைத்தால் அது தவறு. அதனை விடவும் ஆழமான எத்தனையோ விடயங்கள் உள்ளன என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.