மகாவலி காணிகளுக்கான உறுமய திட்டத்தின் கீழ் காணி உரிமைகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, காணி அனுமதிப்பத்திரம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெறுவோருக்கு அரச காணிகளுக்கு பூரண உரிமை வழங்கும் உறுமய வேலைத்திட்டம் இலங்கை மகாவலி அதிகார சபையினால் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளுக்கும் பயன்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, தற்போது சுற்றுலா மற்றும் காணி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தின் பிரகாரம் மகாவெளி காணிகளுக்கான பாரம்பரிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.