குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கான டயாலிசிஸ் பிரிவிற்குள் கிருமி தொற்று உண்டானதால் நோயாளர்கள் சிலர் உயிரிழந்தமையை கருத்திற்கொண்டு அந்த பிரிவை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் தற்போதும் இது தொடர்பாக சுகாதார அமைச்சு விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் இரத்தம் ஏற்றும் செயல்முறையின் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இச்சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று இன்று (24) குருநாகலுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.