சுற்றுலாத்துறை அமைச்சுக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை (20) அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சமீபத்தில் இந்தியாவில் இடம்பெற்ற சுற்றுலா தொடர்பான நிகழ்வின் போது அவர் தெரிவித்த கருத்தைகளையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்திய சுற்றுலாப் பயணிகளுக்காக இலங்கையை ஊக்குவிக்கும் சுற்றுலா நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, இலங்கை இந்தியாவின் ஓர் அங்கமாக இருந்ததாகக் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்தும், பதவி விலக வலியுறுத்தியும் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.