இ.தொ.கா. கொண்டு வந்த வீடமைப்பு திட்டத்துக்கு பிள்ளையார் சுழி போட்டது நாங்கள் என மாற்று கட்சியினர் பெயர்சூட்டி கொள்கின்றனர். அங்குரார்ப்பண நிகழ்வில் பராளுமன்ற உறுப்பினர் மறுதபாண்டி ராமேஷ்வரன் கருத்து.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொண்டுவந்த புதிய வீடமைப்பு திட்டத்துக்கு தாங்கள் தான் பிள்ளையார் சுழி போட்டதாக மற்று கட்சியினர் பெயர் சூட்டிக் கொள்கின்றார்கள் ஆகையால் தான் எவ்வித அபிவிருத்திகளும் இடம்பெறுவதில்லையென என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மறுதபாண்டி ராமேஷ்வரன் தெரவித்துள்ளார்.
இன்று (20) பொகவந்தலாவ கெம்பியன் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆரம்பப்பிரிவுக்கான அங்ரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ஆரம்ப காலப்பகுதியில் இந்திய அரசாங்கத்தோடு கலந்துரையாடி 4000 ஆம் வீட்டுத்திட்டத்தை கொண்டு வந்தவர் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான், நேற்றய தினம் பத்தாயிரம் இந்திய அரசாங்கம் வழங்கியுள்ள வீட்டுத்திட்டத்தில் முதற்கட்டமான 1300வீடுகளுக்கான அடிகல் நாட்டப்பட்டது.
கடந்த காலங்களில் ஒரு வீட்டினை அமைக்க 09 இலட்சம் ரூபா தேவைப்பட்டது. தற்பொழு வீடு ஒன்றினை அமைக்க 32 இலட்சம் ரூபா பணம் தேவைப்படுகிறது. சௌமிய முர்த்தி தொண்டமான் காலப்பகுதியில் இருந்து ஆறுமுகன் தொண்டமான் காலம் வரை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் நியமனங்களை பெற்றுக்கொடுத்தது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தற்போது கூட வழங்கப்பட உள்ள உதவி ஆசிரியர் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
மலையகம் கல்வியில் முன்னிலை பெறவேண்டும் என்பதற்காக தான் நாங்கள் கல்விதுறைக்கு பாரிய நிதியினை வழங்குகின்றோம் இன்று மலையகத்தில் கல்வி கற்றவர்கள் முன்னிலையாக திகழ்கின்றனர். என குறிப்பிட்டார்.
பொகவந்தலாவ நிருபர் எஷ். சதீஷ்