கம்பஹா பியகம பிரதேசத்தில் தேசிய வைத்தியசாலை மற்றும் சிறுவர் வைத்தியசாலையை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் அதிகரித்துவரும் சனத்தொகை வளர்ச்சி மற்றும் கைத்தொழில்மயப்படுத்தலுக்கு அமைவாக குறித்த மாவட்டம் பிரதான சேவை விநியோக மையமாக உள்ளது.
அதனால் சுகாதார சேவைகளுக்கான கேள்வி அதிகரித்து வருவதுடன், குறித்த கேள்வியைப் பூர்த்தி செய்வதற்கு தேசிய வைத்தியசாலை மற்றும் சிறுவர் வைத்தியசாலையை உருவாக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, அரச தனியார் பங்குடமை முறைமையின் கீழ் தேசிய வைத்தியசாலை மற்றும் சிறுவர் வைத்தியசாலையை குறித்த மாவட்டத்தில் நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக பியகம வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள 07 ஏக்கர்கள் 03 றூட் கொண்ட இரண்டு காணித்துண்டுகளை கையகப்படுத்தி அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் வழங்கிய பின்னர் உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.