Our Feeds


Friday, February 16, 2024

SHAHNI RAMEES

மனைவியுடன் தகராறு – கணவன் கிணற்றில் குதித்து தற்@கொலை

 



வவுனியா, செட்டிகுளம், வீரபுரம் பகுதியில் இன்று

(16) காலை மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவனான இளம் குடும்பஸ்தர் வீட்டில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.




இதனையடுத்து, மனைவியும், பிள்ளைகளும் அயலில் உள்ளவர்களை அழைத்து குறித்த நபரை மீட்க முயற்சித்ததோடு கிராம அலுவலர் மற்றும் பொலிசாருக்கும் அறிவிக்கப்பட்டது.




அப் பகுதி மக்களின் உதவியுடன் அவர் மீட்கப்பட்ட போதும், அவர் உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளார்.




இதனையடுத்து சடலம் செட்டிகுளம் வைத்தியசாலையில் பொலிசாரால் ஒப்படைக்கப்பட்டதுடன், அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.




சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய செபமாலை மொரிசன் என்பவரே உயிரிழந்துள்ளார்.




சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »