ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள்
சஜித் பிரேமதாசவுடன் இணைந்து கொண்டனர்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஹோமாகம அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான காமினி திலகசிறி அவர்களும்,
கெஸ்பேவ மாநகர சபையின் முன்னாள் தவிசாளரும், மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான காமினி சில்வா,ஆகியோர் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து,ஐக்கிய மக்கள் சக்திக்கு தமது ஆதரவை தெரிவித்தனர்.