கடவத்த மஹாமாயா வித்தியாலயத்தின் மாணவப் பாராளுமன்ற முதல் அமர்வுக்காக ஜனாதிபதி செயலகத்துக்கு வருகை தந்திருந்த மாணவத் தலைவர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற அமைச்சரவை கூட்டம் நடைபெறும் அரங்கத்துக்கு அழைத்திருந்தார். மாணவர்கள் அமைச்சரவைக்கு அழைக்கப்பட்டிருந்தமை இதுவே இலங்கை வரலாற்றில் முதல் தடவை ஆகும்.
அமைச்சரவை குறித்து மாணவர்கள் புரிந்துணர்வை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி முன்னெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.