சிறைக்கைதிகளின் கைரேகைகளை பெற்று கைதிகளை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, தற்போது நாட்டில் காணப்படும் முப்பது சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் கைரேகைகளை பெற்று டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளது .
இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கைதியின் கைரேகைகளைப் பெற்று அவர்களுக்காக தயாரிக்கப்பட்பள்ளி தொழில்நுட்ப அமைப்பில் உள்ளீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளாகவும் பணிப்பாளர் தெரிவித்தார் .