இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில்
கடவுச்சீட்டு வழங்குவதற்கான கட்டணம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.5,000 ரூபாவாக இருந்த சாதாரண சேவை வெளிநாட்டு கடவுச்சீட்டு கட்டணம் 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை திருத்தம் இணையவழி மற்றும் சாதாரண பிரிவுகளுக்கு செல்லுபடியாகும் என குடிவரவுத் துறை தெரிவித்துள்ளது.