தென்மேற்கு ஆப்பிரிக்க நாடான நமீபியாவின் ஜனாதிபதி
ஹேஜ் கீங்கோப் இன்று அதிகாலை காலமானார். 82 வயதுடைய இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததையடுத்து, தலைநகர் வின்ட்ஹோக்கில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் ஜனாதிபதி ஹேஜ் கீங்கோப், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக துணை ஜனாதிபதி நங்கோலோ தெரிவித்தார். ஹேஜ் கீங்கோப் 2015ஆம் ஆண்டு முதல் முறையாக ஜனாதிபதியானார். தற்போது 2ஆவது முறையாக அப்பதவியை வகித்து வந்தார்.