76வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 754 சிறை கைதிகளுக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு சிறைச்சாலையிலிருந்தும் 729 ஆண் சிறை கைதிகளும் 25 பெண் சிறை கைதிகளும் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.