இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி
ஒத்திகையின் போது குளவி கொட்டுக்கு இலக்கான 73 பாடசாலை மாணவர்கள் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.பசறை தேசிய பாடசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை (20) மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த மாணவர்களில் 18 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் எஞ்சிய மாணவர்கள் வைத்தியசாலையிலிருந்து வீடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் பசறை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.
பசறை தேசிய பாடசாலையின் வருடாந்த இல்லங்களுக்கிடையிலான விளையாட்டு நிகழ்வுக்கான ஏற்பாடுகள் இந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.