ஜோர்தானில் இரண்டு ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் சிரமத்திற்குள்ளான 66 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
குறித்த தொழிற்சாலைகளில் பணியாற்றிய இலங்கையர்கள் குழுவொன்று தமக்கான அனைத்து சலுகைகளையும் பெற்றுக் கொண்டு இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
ஜோர்தானிய தொழிற்சாலையில் பணிபுரிந்த மற்றுமொரு இலங்கையர் குழு எதிர்வரும் இரண்டு நாட்களில் இலங்கை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஜோர்தானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.