கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முட்டை ஒன்றின் விலை 40 ரூபாவாக குறைக்கப்பட்ட போதிலும் மீண்டும் ஒரு முட்டையின் விலை 58 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
தாம் ஒரு முட்டையை மொத்த விலையில் 60 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதாக பேக்கரி உரிமையாளர்கள் கூறுகின்றனர். கோழிப்பண்ணை உரிமையாளர்களே இவ்வாறு முட்டை விலையை உயர்த்தியதாக முட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இடைத்தரகர்கள் குழுவொன்றே முட்டையின் விலையை அதிகரித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வேகமாக அதிகரித்து வரும் முட்டை விலையைக் கட்டுப்படுத்த எதிர்காலத்தில் சில நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.