டிசம்பர் 2022 நிலவரப்படி கிட்டத்தட்ட 50,000
விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டன.நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பகிர்ந்துள்ள புள்ளிவிபரங்களின்படி, 48,391 விவாகரத்து வழக்குகள் 2022 டிசம்பர் 31 வரை நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
நேற்று காதலர் தினத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நீதியமைச்சர், இந்த காலப்பகுதியில்
37, 514 வழக்குகள் வாழ்க்கைத் துணை அல்லது குழந்தைகளுக்கான பராமரிப்பு தொடர்பானது.
"இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டிற்கு இது ஒரு பெரிய எண்ணிக்கையிலான வழக்குகளாக கருதப்படுகிறது," என்று அவர் மேலும் கூறினார்