நிர்ணயிக்கப்பட்ட எடை மற்றும் விலையை காட்டாத சுமார் 50 பேக்கரிகள் மீது சோதனை நடத்தப்பட்டு, அந்த பேக்கரிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடைக்கான வர்த்தமானி வெளியிடப்பட்டதை அடுத்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று (05) இந்த சோதனைகளை ஆரம்பித்துள்ளது.
பேக்கரிகள் மற்றும் கடைகளில் மேற்படி சேதனை நடவடிக்கைள் மேற்கொள்ளபட்டமை குறிப்பிடத்தக்கது.