அமெரிக்காவில் உள்ள சிலி மற்றும் மத்திய சிலி
ஆகிய பகுதிகளிலுள்ள வனப்பகுதிகள் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளதால் அப்பகுதி முழுதும் கரும்புகையால் சூழ்ந்துள்ளது.இத்தீ விபத்தால் அங்கிருந்த 1,000 வீடுகளுக்கு மேல் எரிந்து சேதமடைந்துள்ளதுடன் இதுவரை உயிரிழந்தோரின் எணிணிக்கை 46ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொலிஸார் மற்றும் தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ பரவுவதை தடுக்கும் வகையில், விமானங்களின் உதவியுடனும் தண்ணீர் எடுத்துவரப்பட்டு தீ அணைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.