Our Feeds


Monday, February 12, 2024

SHAHNI RAMEES

400 வாகனங்கள் மோசடியான முறையில் பதிவு : மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் ஐவர் உட்பட 7 பேர் மீது வழக்கு!

 



மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகள் ஐவர்

உட்பட 7 பேருக்கு எதிராக இலஞ்சம்,  ஊழல், மோசடி  விசாரணை ஆணைக்குழு வழக்குத்  தாக்கல் செய்துள்ளது.


இலங்கை சுங்கத் திணைக்களத்தின் சட்டவிதிகளுக்குப் புறம்பாக சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட  பெருந்தொகையான கார்களைப் பதிவு செய்து அரசாங்கத்துக்கு நிதி இழப்பை  ஏற்படுத்தியமை தொடர்பிலேயே இவர்களுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 400 வாகனங்கள் மோசடியான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் 156 வாகனங்கள் தொடர்பில் குறிப்பிட்ட தகவல்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்ததக்து.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »