மனித பாவனைக்கு பயன்படுத்த முடியாத நச்சுத்தன்மை கலந்த 4 கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் வவுனியாவில் நீதிபதி முன்னிலையில் அழிக்கப்பட்டது.
மனித பாவனைக்கு பயன்படுத்த முடியாத நச்சுத்தன்மை கலந்த அரிசி, மஞ்சள், கொத்தமல்லி, நிலக்கடலை உட்பட 7000 கிலோகிராம் உணவுப் பொருட்களும், சட்டவிரோத கிருமி நாசினிகளுமே இவ்வாறு அழிக்கப்பட்டது.
குறித்த பொருட்கள் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச எல்லைப்பகுதியில் வைத்து சுகாதார பரிசோதகர்களால் பறிமுதல்செய்யப்பட்டு நீதிமன்றில் பாரப்படுப்பத்தப்பட்டிருந்தது. அவற்றை உடமையில் வைத்திருந்த நபர்களுக்கு ஒன்றரை இலட்சம் ரூபாய் தண்டப்பணம் நீதிமன்றால் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் (07)ஆம் திகதி வவுனியா பம்பைமடுப் பகுதியில் வைத்து மேலதிக நீதவான் ஜெ. சுபாஜினி முன்னிலையில் குறித்த பொருட்கள் அழிக்கப்பட்டது.