Our Feeds


Saturday, February 17, 2024

SHAHNI RAMEES

டிரம்ப்புக்கு ரூ. 3 ஆயிரம் கோடி அபராதம்!


தன்னுடைய சொத்து மதிப்பு குறித்து பொய்யான

தகவல்களை அளித்ததற்காக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு 35.5 கோடி டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 2.94 ஆயிரம் கோடி) அபராதம் விதித்துள்ளது நியூ யார்க் நீதிமன்றம்.


தொடர்ந்து பல ஆண்டுகளாகத் தன்னுடைய சொத்து மதிப்பு பற்றிப் பொய்யான தவறான தகவல்களை டிரம்ப் தந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டு நடந்துவந்த சிவில் வழக்கு விசாரணையின் முடிவில் பெருந்தொகையை அபராதமாகச் செலுத்த வேண்டும் என்று நீதிபதி ஆர்தர் என்கோரன் தீர்ப்பளித்துள்ளார்.


டொனால்ட் டிரம்ப், அவருடைய இரு மூத்த மகன்கள், அவருடைய நிறுவனம், நிர்வாகிகள் ஆகியோர் திட்டமிட்டுத் தங்கள் சொத்துகள் பற்றிப் பொய்யான நிதி விவரங்களை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவற்றுக்கு அளித்துத்  தொடர்ந்து ஏமாற்றிவந்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »