Our Feeds


Tuesday, February 20, 2024

SHAHNI RAMEES

20,000 ஆசிரிய வெற்றிடங்கள் உள்ளன - கல்வி அமைச்சர்.

 

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதில் 10 மாத கால தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆட்சேர்ப்பை நிறுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில் நீதிமன்ற தீர்ப்பு கிடைத்தால், ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப முடியும். 20,000 ஆசிரியர்களுக்கான வெற்றிடம் உள்ளதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.



ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (19) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இதனைக் குறிப்பிட்டார்.



இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,



ஆசிரியர் சேவையை விட்டுச் சென்ற மற்றும் வெளிநாடு சென்ற ஆசிரியர்கள் காரணமாக மாகாண மட்டத்தில் 13,500 வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் ஆட்சேர்ப்பு தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு கிடைத்தால், விரைவில் ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள முடியும்.



இதுதவிர, ஆசிரியர் சேவை யாப்பின் படி,விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பது தொடர்பான பரீட்சை மார்ச் முதல் வாரத்தில் நடத்தப்பட்டு, மார்ச் இறுதிக்குள் ஆள்சேர்ப்பு நடைபெறும் என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »