2000 புதிய கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ப்ரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக கிராம உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படாமையினாலும் கிராம உத்தியோகத்தர்களாகப் பணியாற்றிய சிலர் ஓய்வு பெற்றுள்ளமையினாலும் பதவி வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.