நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (08) ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை 2,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், ஒரு கிலோ முருங்கைக்காயின் மொத்த விலை 1,980 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.
இதையடுத்து இலங்கையில் உள்ள எந்தவொரு பொருளாதார மத்திய நிலையத்திலும் நேற்று முருங்கை விற்கவில்லை.
இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் உச்சம் தொட்ட மரக்கறிகளின் விலைகள் தற்போது குறைவடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.