Our Feeds


Wednesday, February 21, 2024

SHAHNI RAMEES

தென்கொரியாவில் 1,600க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் இராஜினாமா...!

 





தென்கொரியாவில் சுமார் 1 இலட்சத்து 40 ஆயிரம்

வைத்தியர்கள் பணிபுரிகின்றனர். அங்குள்ள மக்கள்தொகையின்படி 10 ஆயிரம் பேருக்கு 25 வைத்தியர்கள் என்ற நிலை உள்ளது. எனவே வைத்தியர்களின் பற்றாக்குறையை தீர்க்க அரசாங்கம் முடிவு செய்தது. அதன்படி வருகிற கல்வியாண்டு முதல் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை 2 ஆயிரமாக உயர்த்தப்படும் என அரசாங்கம் அறிவித்தது.


அரசின் இந்த அறிவிப்பால் வைத்தியர்களின் பணிச்சுமை குறையும். அதேபோல் நோயாளிகளுக்கும் சிகிச்சை எளிதில் கிடைக்கும் என அரசாங்கம் எதிர்பார்த்தது. ஆனால் அதற்கு நேர்மாறாக அரசின் இந்த மருத்துவ கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைத்தியகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


அதாவது 2 ஆயிரம் பேரை கையாளக்கூடிய அளவுக்கு நம்மிடம் போதுமான மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. மேலும் அளவுக்கு அதிகமான வைத்தியர்களை பணியமர்த்தும்போது தேவையற்ற சிகிச்சை மேற்கொள்ளும் சூழல் நிலவும் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.


முக்கியமாக அதிகளவில் வைத்தியர்கள் உருவாக்கினால் எதிர்காலத்தில் தங்களுக்கு சம்பளம் குறைய வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் அஞ்சுகின்றனர். எனவே அவர்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே போராட்டத்தின் ஒருபகுதியாக ஒரே நாளில் 1,600க்கும் அதிகமான பயிற்சி வைத்தியர்கள் இராஜினாமா செய்தனர். இதனால் அங்கு வைத்தியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக ஏராளமான சிகிச்சைகள் இரத்து செய்யப்பட்டதால் நோயாளிகள் உரிய சிகிச்சை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே வைத்தியர்கள் இந்த போராட்டத்தை உடனடியாக கைவிடும்படி தென்கொரிய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »