அமெரிக்கா தலைமையிலான செங்கடல் கூட்டணியில் ஈடுபட்டுள்ள எந்த நாடும் குறிவைக்கப்படும் என ஹூதி அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
250 மில்லியன் ரூபா செலவிட்டு இலங்கை கடற்படைக் கப்பலை ஈடுபடுத்தி,இந்த ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக sea patrolling வேலைத்திட்டத்தில் பங்கெடுக்க வேண்டும் என ஜனாதிபதி அண்மையில் தெரிவித்துள்ள சூழ்நிலையில் ஹூதி அமைப்பின் தலைவரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.