Our Feeds


Wednesday, January 24, 2024

News Editor

பாவித்த வாகனங்களுக்கும் VAT


 நாட்டில் பாவனைக்குட்பட்ட வாகனங்களுக்கும் VAT வரியை சேர்த்துள்ளதால் கறுப்புச் சந்தை உருவாகியுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலை அதிகரித்து வருவதாக இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையின் காரணமாக, முறையான நிறுவனங்கள் பயன்படுத்திய வாகனங்களை விற்பனை செய்வதிலிருந்து முற்றாக விலக வேண்டிய நிலை ஏற்படும் எனவும், இதனால் அரசாங்கம் இதுவரை பெற்று வந்த வரி வருமானத்தையும் இழக்க நேரிடும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நான்கு வருடங்களாக வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக பதினைந்தாயிரம் பேர் வேலை இழந்துள்ளதாகவும், வாகனத் தொழில் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் குறித்த சங்கம் கூறுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »