தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பெலியத்த
வெளியேற்றம் அருகே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஐவரில் 'எங்கள் மக்கள் கட்சி' என்ற அரசியல் கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் அடங்குவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.கொஸ்கொட சுஜி தலைமையிலான பாதாள உலக குழுவுக்கும் இவருக்குமிடையில் நிலவிய நீண்டகால பகையே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமாக இருக்கலாமென பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன.
குடாவெல்லையில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்த சமன் பெரேரா , 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.