நாட்டில் நடைபெறவிருக்கும் தேர்தல்கள், இலங்கை அரசியல் அரங்கில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் சவாலாக இருக்கும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது உருவாகியுள்ள அரசியல் அமைப்புகளும் அரசியல் பிளவுகளும் சாதாரணமான விடயமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முறை அரசியல் போரில் தேசிய மக்கள் சக்தி தோல்வியுற்றால், அது நாட்டையும் மக்களையும் மேலும் துயரத்திற்கு இட்டுச் செல்லும் எனவும், தேசிய மக்கள் சக்தியின் வெற்றி நாட்டை புதிய அபிலாஸைகளுடன் ஒரு பாதையில் வழிநடத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நீண்டகாலமாக அரசாங்கங்கள் கடைப்பிடித்து வரும் தோல்வியடைந்த பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளுக்கு எதிராக புதிய பொருளாதாரப் பயணத்தை உருவாக்குவது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி விவாதிக்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
Wednesday, January 3, 2024
புதிய கொள்கைகள் தொடர்பில் விவாதிப்போம் - JVP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »