வர்த்தகர் தம்மிக்க பெரேரா ஜனாதிபதித் தேர்தலில் இருந்து தற்காலிகமாக விளக்குவதற்கு தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து அவர் தற்காலிகமாக விளக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடத் தயார் என வர்த்தகர் தம்மிக்க பெரேரா முன்னதாக அறிவித்திருந்தார்.
இதன்படி, கட்சி தம்மிடம் 10 நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகவும், குறித்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து ஏப்ரல் முதல் வாரத்தில் தீர்மானம் எடுப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பொதுஜன பெரமுன மேற்கொண்ட தீர்மானம் எதிர்வரும் மார்ச் மாதம் வரை ஒத்திவைக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.