சனத் நிஷாந்தவிற்கு பதிலாக ஜகத் பிரியங்கர
காலமான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எல்.கே. ஜகத் பிரியங்கர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டதுடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.