இம்ரான் கான், அவரது மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசுகள் தொடர்பான வழக்கில் ஊழல் செய்ததாக நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு இன்று(31) 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தேசியத் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக, அரசு இரகசியங்களை கசியவிட்டது தொடர்பான வழக்கில் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு ஒரு நாளுக்குப் பிறகு இந்தத் தீர்ப்பு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.