தென்துருவ நாடுகளின் பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பதற்கு G77 மற்றும் சீன குழுக்களுக்கு மத்தியில் ஒற்றுமை ஏற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
உகண்டா - கம்பாலா நகரில் நடைபெறும் G77 மற்றும் சீனாவின் 3ஆவது தென் துருவ மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதை வலியுறுத்தினார் -
அங்கு மேலும் உரையாற்றிய அவர்,
இக்குழுவின் 60 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் தருணத்தில், தென் துருவத்தின் சவால்களை எதிர்கொள்ள ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை அடிப்படை நியதிகளாக கொண்டு செயற்பட வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்தார்.