சிசிடிவி கெமராகள் மூலம் கொழும்பில் நேற்று திங்கட்கிழமை (22) 125 போக்குவரத்து விதிமீறல்கள் கண்காணிக்கப்பட்டு அது தொடர்பாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் சிசிடிவி கெமராக்கள் மூலம் 125 போக்குவரத்து விதிமீறல்கள் இனங்காணப்பட்டதாகவும் ஆரம்பக் கட்ட நடவடிக்கையாக அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இனங்காணப்பட்ட விதி மீறல்களில் பிரதானமாக பாதையை மாறியமை மற்றும் தரிப்பு பகுதிகளில் நிறுத்தாமல் வாகனம் செலுத்தியமை போன்ற தவறுகள் அவதானிக்கப்பட்டுள்ளன.