தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
தீப்பற்றி எரிந்த பேருந்தில் இருந்தவர்கள் அனைவரும் பேருந்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர் மற்றும் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பஸ் முற்றாக தீப்பிடித்து எரிந்ததுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக பெலியத்த நுழைவாயிலில் இருந்து சகல நுழைவாயில் வரையான நெடுஞ்சாலைப் பகுதி மூடப்பட்டுள்ளதுடன், சகல நுழைவாயிலில் இருந்து வெளிவரும் வாகனங்கள் மீண்டும் பெலியத்த நுழைவாயிலில் நுழையும் என பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து பதுளையை நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்தே இவ்வாறு தீப்பிடித்து எரிந்துள்ளது.