பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் வங்கி அட்டையை திருடி 41000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் மன்னம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் விசேட பரிவில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அனுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கதுரேவெல, கல்லலெல்ல, குசும்கம பிரதேசத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் நகரிலுள்ள அரச வங்கி ஒன்றின் ஏ.டி.எம் இயந்திரத்தில் முறைப்பாட்டாளர் சார்ஜன்ட் பணம் எடுக்கும்போது, சந்தேகத்திற்குரிய பொலிஸ் கான்ஸ்டபிள் அதன் பின்னால் வரிசையில் நின்று இந்த வங்கி அட்டையை திருடிச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.