பால் மாவின் விலையை அதிகரிக்க வேண்டும்
என பால் மா இறக்குமதியாளர்கள் மன்றம் தெரிவித்துள்ளது.இதன்படி, 400 கிராம் பால் மா பாக்கெட் ஒன்றின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என குறித்த மன்றம் தெரிவித்துள்ளது.
15% முதல் 18% வரையிலான VAT அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, மன்றத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்திருந்தார்.
இந்த புதிய விலை இந்த வார நடுவில் இருந்து அமுலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.