Our Feeds


Friday, January 26, 2024

SHAHNI RAMEES

சிறைச்சாலைகளாக மாறும் அரசாங்க கட்டடங்கள்...!



 அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு கட்டடங்களை

சிறைச்சாலைகளாக மாற்றுவதற்கு நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. 


சிறைச்சாலைகளில் காணப்படும் இட நெருக்கடிக்கு தீர்வாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்தார். 


தற்போது 32 ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகள் சிறைச்சாலைகளில் உள்ளனர். 


எனினும், 13,000 கைதிகளுக்கு போதுமான இட வசதி மட்டுமே சிறைச்சாலைகளில் காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 


ஹெந்தலையிலுள்ள தொழுநோயாளர் வைத்தியசாலையின் சில கட்டடங்களும், மட்டக்களப்பில் அமைந்துள்ள பழைய வைத்தியசாலை கட்டடமும் இதற்காக பயன்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.


இது தொடர்பில் சுகாதார அமைச்சுடன் ஏற்கனவே கலந்துரையாடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »