பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற தனியார் (தமிழ் மற்றும் சிங்களம்) பாடசாலைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முஸ்லீம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.