பெறுமதி சேர் வரியை அதிகரிப்பதே அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான மாற்று வழி என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தவறான பொருளாதார தீர்மானங்களை எடுப்பதன் மூலம் ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடையும் எனவும் சிலர் கூறுவது போன்று பிரபலமான தீர்மானங்களை மேற்கொண்டு நாட்டின் எதிர்காலத்தை இருளடையச் செய்ய தாம் தயாரில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் நேற்று இடம்பெற்ற “ஷில்ப அபிமானி 2023” எனும் கைவினைப் பொருட்கள் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு மொத்த தேசிய உற்பத்தியின் ஊடாக 12 வீத வருமானம் பெறப்பட வேண்டும் எனவும் இதனை 15 வீத இலக்குடன் நிறைவு செய்ய வேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.