க.பொ.த உயர்தர 2023 விவசாய விஞ்ஞான வினாத்தாள்கள் கசிந்த சம்பவம் தொடர்பில் மொரட்டுவ மகா வித்தியாலய பரீட்சை நிலைய பொறுப்பாளரின் உதவியாளர் (38) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இது தொடர்பில் ஒருவர் அம்பாறையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.