Our Feeds


Tuesday, January 16, 2024

SHAHNI RAMEES

மஹிந்த கொடித்துவக்கு விளக்கமறியலில்...!




 அவலோகிதேஸ்வரா என்ற பெயரில் தோன்றி

பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பிரசங்கம் செய்த வேளையில் கைது செய்யப்பட்ட மஹிந்த கொடித்துவக்கு எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


சந்தேகநபரை இன்று (16) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் பன்னிப்பிட்டியவில் வைத்து சந்தேகநபர் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளார்.


மஹிந்த கொடித்துவக்கு என்ற போதகர், கடந்த 1ஆம் திகதி எகிப்தில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த நிலையில், அவர் பல இடங்களுக்குச் சென்று சொற்பொழிவாற்றுவதும், அவரைப் பின்பற்றுபவர்கள் அவருக்கு வணக்கம் செலுத்துவதும் போன்ற காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது.


இதன்படி, குறித்த நபரின் விரிவுரைகள் மூலம் புத்தரின் குணாதிசயங்கள் மற்றும் பௌத்த மத போதனைகள் அவமதிக்கப்படுவதாக பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் உட்பட பல தரப்பினரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.


இதன்படி, கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த நபரிடம் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், இது தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்து சந்தேகநபருக்கு வெளிநாட்டுப் பயணத்தடையையும் பெற்றுக்கொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »