இலங்கையில் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமை
குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.முக்கிய பங்குதாரர்களின் முக்கிய உள்ளீட்டை இணைக்காமல் நேற்று குறித்த நிகழ்நிலை காப்புச் நிறைவேற்றப்பட்டது,
இந்த சட்டம் கருத்து சுதந்திரம், புதுமை மற்றும் தனியுரிமையை அச்சுறுத்துவதாக சிவில் சமூகம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
ஜனநாயக விழுமியங்களை ஆபத்தில் ஆழ்த்துவதுடன், தெளிவற்ற மற்றும் அதிக கட்டுப்பாடான சட்டங்கள் முதலீடு மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.
இலங்கைக்கு தேவையான பொருளாதார வளர்ச்சியை குறித்த சட்டம் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.
வெளிப்படைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்குமாறும், எந்தவொரு சட்டமும் மக்களின் குரல்களை நசுக்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் இலங்கையை அமெரிக்கா வலியுறுத்துகிறது.