பெப்ரவரி முதல் வாரத்தில் மின் கட்டணம் திருத்தப்படுமென மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.
மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு தேவையான தரவுகள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இன்று (05) ஜனாதிபதி ஊடக மையத்தில் (PMC) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் தெரிவித்தார்.